திருச்சி காலாவதியான உணவு விற்ற நிறுவனத்திற்கு அபராதம்

84பார்த்தது
திருச்சி காலாவதியான உணவு விற்ற நிறுவனத்திற்கு அபராதம்
கரூர் மாவட்டம் குளித்தலை கல்லை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. திருச்சி கே கே நகர் சுந்தர் நகர் கிளைகளில் கடந்த 18.9.2024ல் வால்நட்ஸ் வாங்கி உட்கொண்டார். சாப்பிட்டதிலிருந்து அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 

மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் தான் வாங்கிய வால்நட்ஸ்கள் இருந்த பாக்கெட்டுகளை ஆய்வு செய்தார். இதில் அந்த பாக்கெட்டில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை. இதனைத் தொடர்ந்து உடல் உபாதைக்கு காரணம் தான் உண்ட வால்நட்ஸ் என்பதை வெள்ளைச்சாமிக்கு புரிந்தது. இதுகுறித்து வெள்ளைச்சாமி திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பாதிப்பை ஏற்படுத்திய உணவுப் பொருளை விற்ற நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரும்படி 10.2.2025 அன்று வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து தீர்ப்பளித்தது. 

இதில் காலாவதியான உணவுப் பொருளை விற்று வாடிக்கையாளருக்கு உடல் உபாதை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக வால்நட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவற்றை விற்ற நிறுவனம் ஆகியவை இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ வெள்ளைச்சாமிக்கு பத்தாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அதனுடன் வால்நட்ஸ் பாக்கெட்டின் விலையான 360 ரூபாய் வழக்குச் செலவாகவும், 5000 ரூபாய் ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி