திருச்சி ஆளுநர் விருதுபெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு

4பார்த்தது
திருச்சி ஆளுநர் விருதுபெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு
உரிமை கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், குடியரசு தினத்தன்று ஆளுநர் விருதினைப் பெற்றார். இந்த சமூகப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு ஆளுநர் அவருக்கு இந்த விருதை வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற விஜயகுமார் மற்றும் அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா ஆகியோருக்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி