திருச்சி: மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இடங்கள் ஆய்வு

5பார்த்தது
வரும் 11ஆம் தேதி திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடியார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பஞ்சப்பூர் மற்றும் பொன்மலை ஜி ஜி கார்னர் ரயில்வே மைதானம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, சீனிவாசன் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி