திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாகத் தெரிவிக்கவும், அவர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு ஏற்படும்.