திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியை, திருப்பூா் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள பருத்தி ஆலையில் பணிபுரிந்தபோது, உடன் பணிபுரிந்த தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த அழகா் மகன் எழிலன் (24) திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் எழிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி எழிலனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 7, 000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.