திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாரச் சந்தையில் ரமேஷ் என்பவரது பைக்கை திருடிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாரச் சந்தையில் காய்கறி விற்பனை செய்வது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்டுப்புத்தூர் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.