திருச்சி திருமண மண்டபத்தில் பணம் திருடிய இருவர் கைது

6பார்த்தது
திருச்சி திருமண மண்டபத்தில் பணம் திருடிய இருவர் கைது
திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகனுக்கு உறையூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது, அவர் கழிவறைக்குச் சென்றபோது, அவர் சட்டையில் வைத்திருந்த ரூ.60,000 ரொக்கம் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேல அம்பிகா பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் உறையூரைச் சேர்ந்த ரங்கராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி