திருச்சி அருகே சிறுநீரகம் செயலிழந்ததால் டைலர் தற்கொலை

84பார்த்தது
திருச்சி அருகே சிறுநீரகம் செயலிழந்ததால் டைலர் தற்கொலை
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் நான்காம் தெருவைச் சேர்ந்தவர் சந்தியாகு டைலர். இவர் சொந்த ஊர் ஓயின்பட்டி அருகே உள்ள குமாரவாடி. இவர் மனைவியைப் பிரிந்து கடந்த ஏழு ஆண்டுகளாக திருவரம்பூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவரது இரு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சந்தியாகு நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவரம்பூர் போலீசார் சந்தியாகு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி