திருச்சி மதுப்பழக்கத்தை கண்டித்த மனைவி- கணவன் தற்கொலை

80பார்த்தது
திருச்சி மதுப்பழக்கத்தை கண்டித்த மனைவி- கணவன் தற்கொலை
திருச்சி அருகே உள்ள வாத்தலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார் இதனால் அவருடைய மனைவி பூங்கொடி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 18ஆம் தேதி அன்று சுரேஷ் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இது குறித்து வாத்தலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி