திருச்சி: தவறான சிகிச்சையில் பெண் பலி: உறவினர்கள் முற்றுகை

1127பார்த்தது
திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஜான்சன் மனைவி ஜெயராணி, கடந்த 3 ஆம் தேதி திருச்சி புத்தூர் ஜேனட் மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை பெற்றார். பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட வயிற்று வலியால் வேறு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, குடலில் ஓட்டை விழுந்ததாகத் தெரியவந்தது. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஜெயராணி உயிரிழந்தார். மகப்பேறு அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறால் குடலில் ஓட்டை விழுந்ததாகவும், மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்றும் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.