புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள், தனது மகனுடன் திருச்சி அருகே உள்ள கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பழூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.