
திருச்சியில் சமுதாயக் கழிவறை கட்டிடம் திறந்து வைத்த நேரு
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து 43.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கழிவறை கட்டிடத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.








































