மணப்பாறை: பேருந்தில் பணம் திருடிய 3 பெண்கள் கைது

1156பார்த்தது
மணப்பாறை: பேருந்தில் பணம் திருடிய 3 பெண்கள் கைது
மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த தமிழரசி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அவரது பர்ஸில் இருந்த 6000 ரூபாய் திருடப்பட்டது. பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று பெண்களை சக பயணிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் அச்சம்பட்டியைச் சேர்ந்த சரோஜா, அன்னக்கொடி, பிரேமா என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி