துறையூர் பாலக்கரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள லோடு வேன் ஸ்டாண்டில் நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த ஐந்து லோடு வேன்களில் இருந்து பேட்டரிகள் திருடு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த வேன் உரிமையாளர்கள் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.