திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மாநில சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். அருகில் இருந்த பொதுமக்கள் டிராக்டரை அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.