திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் ரவிசங்கர் சட்டசபையின் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று தனது சொந்த தொகுதியான துறையூருக்கு முதல் முறையாக வருகை தந்த அவருக்கு, முசிறி பிரிவு சாலை ரவுண்டானா அருகே தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், திருச்சி சாலை வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக தலைவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று தனது பணிகளைத் தொடங்கினார்.