திருச்சியில் ஓடும் பஸ்ஸில் வழிப்பறி முதியவர் கைது

707பார்த்தது
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் வழிப்பறி முதியவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் பாச்சலூரைச் சேர்ந்த ராஜலிங்கம், திருச்சியில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகரப் பேருந்தில் பயணித்தபோது, அவரது சட்டைப் பையில் இருந்து ₹1000 பணத்தை எடுக்க முயன்ற மர்ம நபரை ராஜலிங்கம் கையும் களவுமாகப் பிடித்தார். பின்னர் அவரை கோட்டை குற்றவியல் போலீஸிடம் ஒப்படைத்தார். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த முருகன் (63) என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி