சமயபுரம் அருகே மாடு முட்டியதில் முதியவர் சாவு

869பார்த்தது
சமயபுரம் அருகே மாடு முட்டியதில் முதியவர் சாவு
லால்குடி அருகே சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சதாசிவம், கடந்த ஆறாம் தேதி சமயபுரம் நால்ரோடு பகுதியில் நடந்து சென்றபோது, காளை மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சமயபுரம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி