திருச்சி திருவரம்பூர் பிரகாஷ் நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர் அப்சல், நேற்று தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகளில் திருவரம்பூர் எல்ஐசி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மோதி பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவரம்பூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.