மணப்பாறை அருகே மினி வேன் மோதி முதியவர் சாவு

71பார்த்தது
மணப்பாறை அருகே மினி வேன் மோதி முதியவர் சாவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேலக்களத்தை சேர்ந்தவர் யாகப்பன் வயது (73). இவர் நேற்று காலை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மணப்பாறையில் இருந்து திருச்சி சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் 

அப்போது கரூர் மாவட்டம் தோகமலை சேர்ந்த கோபாலன் என்பவர் ஓட்டி வந்த மினி சரக்குவேன் எதிர்பாராத விதமாக யாகப்பன் ஒட்டி வந்த சைக்கிள் மீதும் மோதியது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி