திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கள்ளக்காம்பட்டி கிராமத்தில், கிணற்றின் அருகே நடந்து சென்ற மூதாட்டி சின்னம்மாள் கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு மூலம் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.