மணப்பாறை அருகே கிணற்று நீரில் மூழ்கி விவசாயி சாவு

1548பார்த்தது
மணப்பாறை அருகே கிணற்று நீரில் மூழ்கி விவசாயி சாவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குப்பனார்பட்டியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் தனது விவசாய நிலத்திற்குச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தேடினர். அப்போது, அறிவழகன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி