திருச்சி ஒஎஃப்டியில் முறைகேடு நான்கு பேருக்கு 3ஆண்டு சிறை

5பார்த்தது
திருச்சி ஒஎஃப்டியில் முறைகேடு நான்கு பேருக்கு 3ஆண்டு சிறை
திருச்சி ஓ. எப். டி. தொழிற்சாலையில் 2015-ஆம் ஆண்டு வாயில் காப்பாளர், கீழ்நிலை எழுத்தாளர், பல்நோக்கு ஊழியர் ஆகிய 3 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரில், ராம்கோபால், தனஞ்ஜெயராய், ரோஷன்குமார், அஞ்ஜித்குமார் ஆகியோரின் கைரேகை மாறுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி நசிர் அலி, நால்வருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி