தொட்டியம் வட்டம், பெரியநாச்சிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த நான்கு டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்ததில், அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வரதராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், சக்திவேல் மற்றும் மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த மாணிக்க ஜோதி, பார்த்தசாரதி (33) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.