திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கிராம திருவிழாக்களும் நடைபெற்று வருவதால் ஆயிரக்கணக்கானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர். ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததால், விலை உயர்ந்தது. வியாபாரிகள் தரப்பில், மொத்தமாக சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளின் விலை 50 ஆயிரத்தை நெருங்கியது.