திருச்சி அருகே மனைவியை தாக்கிய கணவர்‌கைது

4பார்த்தது
திருச்சி அருகே மனைவியை தாக்கிய கணவர்‌கைது
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டை பரக்கத் நகரைச் சேர்ந்த ராபின்சன் (41), தனது மனைவி சசிகலாவிடம் ரேஷன் கார்டைக் கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்த சசிகலா அளித்த புகாரின் பேரில், துவாக்குடி போலீசார் ராபின்சனை கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.