திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது

62பார்த்தது
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். அப்போது ஆட்டோவுக்குள் ஒரு நபர் அமர்ந்திருந்தார். இதையடுத்து அருண்குமார் ஆட்டோவில் இருந்து இறங்குமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர் அருண்குமாரை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து கீழச்சிந்தாமணி படுவைநகர் பகுதியைச் சேர்ந்த எமர்சன் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி