மணப்பாறை அருகே புத்தாநத்தம் பகுதியில் தடுப்பூசி போடப்பட்ட 6 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. எளமணத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் ஆண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி குளத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. மறுநாள் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புத்தாநத்தம் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.