மணப்பாறை அருகே மட்டபாறை பட்டியைச் சேர்ந்த காளியம்மாள் நேற்று காலை தனது ஆடு மாடுகளை மேய்த்துவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, வெள்ளிப் பொருட்கள் மற்றும் சுமார் 5000 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.