மணப்பாறை: தவறவிட்ட மணி பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துனர்

2பார்த்தது
மணப்பாறை நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் என்பவர் திருச்சி சென்று இறங்கியபோது தனது பணப்பையை பேருந்தில் தவறவிட்டுள்ளார். அவர் சென்னை சென்ற பிறகு, பேருந்து நடத்துனர் சிவகுமார் அவரைத் தொடர்புகொண்டு பணப்பை பேருந்தில் இருப்பதை தெரிவித்துள்ளார். தமிழ் தனது பணப்பையையும் ஆவணங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவம் நேர்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி