திருச்சி: இருசக்கர வாகனம் மோதி இளைஞா் பலி

561பார்த்தது
திருச்சி: இருசக்கர வாகனம் மோதி இளைஞா் பலி
திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முருகன்(41). இவர் உறையூர் தேநீர்கம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அவர் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது தவளைவீரன்பட்டி அருகே எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் முருகன் மற்றும் பிச்சைரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன் (33) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தார். கிருஷ்ணன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

முருகன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி