திருச்சி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ரமேஷ்

738பார்த்தது
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே. பெரியபட்டி மற்றும் ஆண்டவர்கோவில் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தாங்கள் இன்னும் அரசியலைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும், மக்களை ஏமாற்றாமலும், ஊழல் செய்யாமலும் மக்களுக்குச் சேவை செய்யக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் வாக்களித்ததற்குப் பெருமைப்படும் அளவிற்குச் செயல்படுவோம் என்றும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி