மணப்பாறை மருத்துவமனையிலிருந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு

59பார்த்தது
மணப்பாறை மருத்துவமனையிலிருந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
மதுரை எம்கே புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்வரன் கடந்த 27ஆம் தேதி அன்று கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து திடீரென அவர் காணாமல் போனார். இதுகுறித்து அவருடைய மனைவி பிரியா மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 30) மணப்பாறை ரயில்வே கோட்ரஸ் பின்புறம் உயிரிழந்த நிலையில் சடலமாக முகேஷ்வரன் கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி