திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்குறிச்சி கிராமத்தில் ராஜா என்பவர் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை தனது பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். வளநாடு காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 9 கிலோ 600 கிராம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.