திருச்சி மணிகண்டம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் துவக்கம்

72பார்த்தது
திருச்சி மணிகண்டம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் துவக்கம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர்களின் வாசகத்திற்கு ஏற்ப தை மாதத்தில் விவசாயிகள் நெல்பயிர்களை கதிர் அடித்து புதிய நெல்கதிர்களை வைத்து பொங்கல் வைத்து சாமியிடம் படைத்து கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரிய பொங்கலாக கொண்டாடப்படும். 

தை மாதம் பிறக்க ஒரிரு நாட்களே உள்ள நிலையில் திருச்சி மணிகண்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள அம்மன் நெல்பயிர்கள் கதிர் அடிக்கும் பணிகள் விவசாயிகள் இறங்கியுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உழவு செய்து நடப்பட்ட நெல்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் தற்போது விவசாயிகள் நெல் அறுவடை பணியில் இறங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி