திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம், துறையூர் ஐயப்ப சேவா சங்கம், இந்து சமய அறநிலையத்துறை, மற்றும் செங்கடுப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து துறையூர் பெருமாள் மலையைச் சுற்றி 500 மரக்கன்றுகள் மற்றும் 500 பனை விதைகளை நடும் பணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் சரவணன், அறநிலையத்துறை செயல் அலுவலர், ஐயப்ப சேவா சங்கத்தின் மதனகோபால், மற்றும் திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.