துறையூர் 50 கோடி ஏமாற்றிய நபரை கைது செய்யகோரி சாலை மறியல்

2பார்த்தது
துறையூர் அருகே காளிப்பட்டியைச் சேர்ந்த அப்பாவுத்துறை என்பவர் மாரியம்மன் சிட் பண்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளார். கடந்த ஐந்து நாட்களாக கடையையும் வீட்டையும் பூட்டிவிட்டு, மொபைல் போனை அணைத்துவிட்டு தலைமறைவானதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி