ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மாசி தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (27ஆம் தேதி) பந்த காட்சி வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து நம்பெருமாள் ஒற்றைப் பிரபை வாகனத்தில் எழுந்தருளி, 108 தீப்பந்தங்களுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த பந்தக் காட்சி வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து பரவசமடைந்தனர்.