திருச்சி மாவட்டம் தா. பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பலம் கிராமத்தில் இரவு பகல் பாராது தெருக்களில் சுற்றி வரும் நாய்களால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரை கடிக்கும் நோக்கில் துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் உயிரைக் காக்கும் விதமாக தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.