திருச்சி: மொபைல் பயன்பாட்டை கண்டித்த தந்தை.. மாணவி தற்கொலை

73பார்த்தது
திருச்சி: மொபைல் பயன்பாட்டை கண்டித்த தந்தை.. மாணவி தற்கொலை
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி போன் பேசியதால் தந்தை அவரை கண்டித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 5) தொடர்ந்து போன் பேசிக் கொண்டிருந்ததால் தந்தை அவரை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி