மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவர் கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி நாகராஜன் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி ஏர்போர்ட் வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் காணவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி நாயகி அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து மாயமான நாகராஜனை தேடி வருகின்றனர்.