திருச்சி மாவட்டம், முசிறியில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு சிறப்புரை ஆற்றினார்.