துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் முன் பிரகாரத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் இருந்ததால், தனியார் அமைப்பு ஒன்று அதைச் செய்ய கோரிக்கை விடுத்திருந்தது. கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பெண் உட்பட மூவர் தங்களது கட்டுப்பாட்டிலேயே கோயிலை வைத்திருந்தனர். தங்களிடம் கேட்காமல் அறநிலையத்துறையில் பணிகள் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டதால், அந்த சுவாமி சிலைகளை மூவரும் சேர்ந்து இடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூவர் மீதும் கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.