திருச்சி: அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்

74பார்த்தது
சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில்‌ தில்லை நகரில் அமைந்துள்ள கழக அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது‌. இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி