திருச்சி: உடல்நிலை சரியில்லாத மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

55பார்த்தது
திருச்சி: உடல்நிலை சரியில்லாத மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பழனியம்மாள் வயது (86). உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இதனால் ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாக நேற்று (மார்ச்.24) வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து அவருடைய மகன் உதயசூரியன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாத்தலை போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி