திருச்சி: மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்

0பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை திருச்சி தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்ததால், திருச்சி மாவட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி