திருச்சி: ரவுடி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

53பார்த்தது
திருச்சி: ரவுடி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
திருச்சி, பாலக்கரை, கெம்ப்ஸ்டவுன், செபாஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மேத்தா (வயது 25). இவர் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாலக்கரை போலீசார் இவரை சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் வைத்து, தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

அப்போது அவர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் மேத்தாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, குண்டர் சட்டத்தில் மேத்தாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய சிறையில் இருக்கும் மேத்தாவுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.