மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட தணிக்கையில், கோவில்பட்டி சாலை மற்றும் தினசரி காய்கறி சந்தை பகுதியில் அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பாரதியாா் நகரைச் சோ்ந்த ஞானசேகா் (50), இலுப்பூரை அடுத்த மெய்யக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த சேட்டு (எ) நல்லசாமி (45) மற்றும் செட்டியப்பட்டியைச் சோ்ந்த சிவபாலக்குமாா் (35) ஆகிய மூவரை காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா். அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவா் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைக்கப்பட்டனா்.