திருச்சி ஸ்ரீரங்கம் பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மணிவேல், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வசூல் முகவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.