திருச்சி; மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

543பார்த்தது
திருச்சி; மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி டாக்டர். வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மேயர் மு. அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் லி. மதுபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தாட்கோ மேலாளர் விஜயகுமார், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி